அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Sunday, 17 September 2017

100 வருடங்களுக்கு பின் பாரீஸ் நகரில் மீண்டும் ஒலிம்பிக்!

Bildergebnis für france olympicsபாரீஸ் நகரில் மிண்டும் ஒலிம்பிக் போட்டி 100 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது
.

ஒலிம்பிக் போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஒலிம்பிக் போட்டி வரும் 2020ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டொக்கியோவில் நடக்கிறது. 

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஒவ்வொரு நாடுகளும் போட்டிபோட்டு வருகின்றனர். 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்த பாரீஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களிடையே நேரடி போட்டி நிலவியது. 

சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் லாஸ் ஏஞ்சல்ஸ் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் பாரீஸ் 2024ஆம் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒலிம்பிக் நடைபெற உள்ளது. 1924ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிதான் பிரான்ஸில் நடைபெற்ற கடைசி ஒலிம்பிக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.