அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Wednesday, 9 November 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி !

itrnewsஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே நிலவிய கடும்போட்டியில் டொனால்ட் டிரம்ப் அதிக வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபர் பதவியைக் கைப்பற்றினார். 

அமெரிக்க அதிபராகத் தெரிவாகியுள்ள டிரம்ப்புக்கு குடியரசு கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வாழ்த்துத் தெரிவித்துள்ளமையானது அமெரிக்க அதிபர் தேர்தலின் தோல்வியை ஹிலாரி ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.