அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Monday, 7 November 2016

இங்கிலாந்தில் ஏ.டி.எம் காட்டில் பிரபாகரனின் படம்

itr newsஏ.டி.எம் காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
குறித்த ஏ.டி.எம் காட் இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் என தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வங்கியே தனது ஏ.டி.எம் காட்டில் பிரபாகரன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதா, அல்லது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த புகைப்படங்களை ஏ.டி.எம் கார்டுகளில் அச்சிடும் வசதியை அளித்து, அதன்மூலம் பிரபாகரன் புகைப்படத்தை புலிகள் ஆதரவாளர்கள் அச்சிட்டுக் கொண்டார்களா என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை.

தற்போது, இதுகுறித்த படமும் செய்தியும் சமூகவலைத்தளங்களில்  தீயாய் பரவியுள்ளது.