அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Wednesday, 12 October 2016

விஜய்க்கு இந்த நேரத்தில் ஒரு வெற்றி வேண்டும்- RJ பாலாஜி

itr newsரேடியோ உலகிலிருந்து வெள்ளித்திரை வந்து கலக்கிக்கொண்டிருப்பவர் RJ பாலாஜி. பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த தேவி படத்தில் இவர் காமெடியனாக நடித்திருந்தார்.
இவரின் காமெடி இந்த படத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தேவி படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும் விழா இன்று சென்னையில் நடந்தது.
இதில் பேசிய பாலாஜி ‘கண்டிப்பாக இந்த படம் தான் பிரபுதேவா மாஸ்டருக்கு சரியான கம்பேக் படம், எல்லோரும் அவரின் நடிப்பு குறித்து புகழ்ந்து வருகின்றனர்.
அதைவிட இயக்குனர் விஜய்க்கு கண்டிப்பாக இந்த நேரத்தில் ஒரு வெற்றி வேண்டும், ஏனெனில் சினிமா மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் சிரமத்தில் இருக்க, இந்த வெற்றி அவருக்கு ஆறுதலை தந்திருக்கும்’ என கூறியுள்ளார்.