அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Sunday, 23 October 2016

மட்டக்களப்பில் விபத்து ; இரு இளைஞர்கள் பலி!

நேற்று இரவு மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

சத்துருக்கொண்டான் பொலிஸ் சாவடிக்கு அருகில் உள்ள வீதி வளைவில் நேற்று இரவு 9.30மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஆறுமுகத்தான்குடியிருப்பினை சேர்ந்த வி.ரதிதரன் (17வயது), க.விதுசன் (17வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் போது விதுசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.