அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Friday, 7 October 2016

தமிழகத்தை ஆளப்போவது யார்? தமிழரா,கன்னடரா?

தமிழகத்தை ஆளப்போவது யார்? தமிழரா,கன்னடரா? இந்தக்கேள்வி தமிநாட்டு அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.இந்த கேள்விக்கு வலு சேர்ப்பது போலவே அஜித் ரஜினி என்றெல்லாம் பலரின் பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றமையும்  ஜெயலலிதா அவர்களின் மௌனமும் அமைந்திருக்கின்றது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 14 நாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அப்பலோ மருத்துவமனை கட்டிலில் இருக்கின்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய விடயமாக தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதனை விரைவில் ஜெயா அறிவிக்கப்போகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதில் முதல்வர் பதவிக்கு தமிழ் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ள ஜெயலலிதா திரையுலக ஜாம்பவானாக இருக்கக்கூடிய ரஜனியினை குறிவைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏழவே நடிகர் அஜித்குமாரை அடுத்த முதல்வராக அறிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் அஜித் அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் அம்மாவின் ஆலோசனையின் கீழ் ரஜனியினை சந்தித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த முதல்வராக தமிழ் தலைவர்களாக இருக்கக்கூடிய பன்னீர் செல்வம் மற்றும் திருமாவளவன், ஆகியோர் மீது நம்பிக்கை இழந்த நிலையில், ரஜனியினை முதல்வராக்க மறைமுகமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

தற்போது ரஜனிக்கு தமிழக மக்கள் மத்தியில் இருக்கின்ற செல்வாக்கினையும்,மதிப்பினையும் சரியாக மதிப்பிட்டுள்ள அதிமுக நிர்வாகிகள், இதற்கான நடவடிக்கையில் ஈடுப்பட்டுவருவதாக தகவல் கசிந்துள்ளது.

இதனை கேள்விப்பட்டு தமிழ் நிர்வாகிகள் சிலர் மிகுந்த கோபத்தில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது..

எதிர்வரும் சில நாட்களில் தமிழகத்தில் பாரிய புரட்சி வெடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

காவிரி நீர் விவகாரத்தில் கன்னடர்கள் மீது கோபத்தில் உள்ள தமிழர்கள் இவ்விடயத்தினை கேள்விப்பட்டு மிகுந்த ஆவேசத்தில் இருப்பதாகவும், கன்னடனின் காலடியில் இனியும் இருக்க போவதில்லை என தமிழ் தலைமைகள் பாரிய எதிர்ப்பு பேரணிக்கு தயாராகிவருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.