அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Monday, 3 October 2016

பிரபாகரனின் உடலை கனவிலும் காணவில்லை ; மஹிந்த

itr newsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லையெனவும், அத்தோடு, பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லையென்றும் கூறியுள்ளார்.
இன்று பத்தரமுல்லையில் நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதே, அவரது சடலத்தை நீங்கள் பார்த்தீர்களா? என  எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மஹிந்த மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லையென்றும், தீவிரவாதத்திற்கு எதிராகவே யுத்தம் செய்ததாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்