அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Sunday, 23 October 2016

கிளிநொச்சி மாணவன் கஜனின் இறுதி அஞ்சலி இன்று

யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட இரண்டு மாணவர்களில் ஒருவரான கிளிநொச்சி, 155ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான நடராஜா கஜன் என்ற மாணவனது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் உள்ள மாணவனது இல்லத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள், பொது மக்கள், அரசியல்வாதிகள் உட்பட பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அத்தோடு குறித்த மாணவனது வீட்டைச் சுற்றி இன்று காலை வரை சிவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.