அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Tuesday, 11 October 2016

சிவகார்த்திகேயன் இப்படி ஒரு கஷ்டத்தை கடந்தாரா?

itr newsசிவகார்த்திகேயனை இன்று பெரிய நட்சத்திரமாக தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய எத்தனை துயரங்களை கடந்து இருக்க வேண்டும் என்பது அவர் மட்டுமே அறிந்தது.
இந்நிலையில் சமீபத்தில் டிடி தொகுத்து வழங்கிய ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர் ‘எல்லோரும் நான் லக்கில் வந்தேன் என்றார்கள், எனக்கு லக் இருந்தது என்றால் என் அப்பாவை ஏன் இளம் வயதில் இழந்தேன்?.
இதே தொலைக்காட்சியில் தொகுப்பாளர் போட்டியில் நான் தோற்றேன், ஆனால், அதற்காக நான் சோர்ந்து உட்காரவில்லை.
மீண்டும் கடினமாக உழைத்தேன், இதே தொலைக்காட்சியில் தொகுப்பாளார் ஆனேன், மேலும் தொலைக்காட்சியில் இருந்து சென்றவர் தோற்றால், நானே எல்லோருக்கும் ஒரு தவறான உதாரணம் ஆகிவிடுவேன், அதற்காக கடினமாக உழைக்கின்றேன்’ என உருக்கமாக கண் கலங்கி பேசினார்.