அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Monday, 10 October 2016

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இசை நிகழ்வுகளை நடத்த தயார்! எஸ்.பி.பாலசுப்ரமணியம்

itr newsயாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளவதற்காக தமிழகத்திருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் வருகை தந்திருந்தார்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இந்த தகவலை வெளியிட்டார்.
சந்திப்பில் கலந்து கொண்ட இருவரும் கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் நின்று கொண்டே சொல்கின்றேன். இங்கு உள்ளவர்களாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், இப்படிப்பட்ட நிகழ்வுகளை இலவசமாக நடாத்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதற்கு பல குழுக்கள், நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவரையும் குறை சொல்லிக் கொண்டு இருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டும். நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் போது, அனைத்து கழகங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கான நிகழ்களை இங்கு நடாத்துவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இவ்வாறான நிகழ்வுகளை எதிர்ப்பவர்களும், ஆதரிப்பவர்களும் ஒன்றிணைந்து வாருங்கள் ஒன்று சேர்ந்து நடாத்துவோம்.
இலங்கை இசைக்கலைஞர்களும் இசைக் கல்வியை கற்றுக்கொள்ள கூடிய ஒர் கல்லூரியை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் இதற்கான ஆரம்ப வேலைத்திட்டத்தை யாழ்.இந்திய துணைத்தூவர் ஊடாக மிக விரைவில் கலைஞர்களுக்கும் மக்களும் அறிவிப்போம். அத்துடன் இக் கல்லூரியில் நாமும் வந்து இசைக் கல்வியை போதனை செய்வோம் என தெரிவித்திருந்தனர்.