அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Sunday, 9 October 2016

சாம்சுங் 800 கோடியை வழங்குகின்றதா அப்பிள் நிறுவனத்திற்கு?

சாம்சுங்  நிறுவனத்துக்கு எதிரான காப்பீடு வழக்கில் அப்பிள் நிறுவனம் வெற்றி பெற்றதை அடுத்து 800 கோடி ரூபாயை அப்பிளுக்கு சாம்சங் நிறுவனம் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகில் முன்னணி செல்போன் நிறுவனங்களாக சாம்சுங்கும்  அப்பிளும் திகழ்கின்றன.

2012  ஆம் ஆண்டு முதலே ஒருவர் மீது ஒருவர் காப்பீடு தொடர்பான குற்றசாட்டுகளை நீதிமன்றத்தில் கூறி வருகின்றன.

இந்நிலையில் சாம்சுங்  நிறுவனத்துக்கு எதிராக அப்பிள் போட்ட ஒரு வழக்கில் சாம்சுங்க்கு  சாதகமாக கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பு வந்தது.

மேல்முறையீட்டுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சென்ற அப்பிள் நிறுவனத்துக்கு, சாதகமாக தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அந்த தீர்ப்பில் சாம்சுங்  நிறுவனம் 800 கோடியை அப்பிள் நிறுவனத்துக்கு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே சாம்சுங், அப்பிள் நிறுவனத்துக்கு எதிரான இன்னொரு காப்புரிமை வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.