அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Friday, 14 October 2016

சுவிஸ்ஸில் மூன்றாம் தலைமுறை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கலாமா? வாக்கெடுப்பு பெப்ரவரி 12ம் திகதி

சுவிஸில் பிறந்த ஒரு குழந்தையின் பெற்றோருக்கும் மற்றும் அந்த பெற்றோரின் தந்தை, தாய்க்கும் சுவிஸ் குடியுரிமை இல்லை என்றால், அந்த குழந்தை மூன்றாம் தலைமுறை அகதி என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு சுவிஸில் வசித்து வரும் மூன்றாம் தலைமுறையினருக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக  நாடாளுமன்றத்தில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வந்துள்ளன.
தற்போது இந்த மூன்றாம் தலைமுறையினருக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக சுவிஸில் உள்ள ஒவ்வொரு மாகாணமும் ஒவ்வொரு சட்டத்திட்டங்களை பின்பற்றி வருகிறது.
ஆனால், இந்த சட்டம் நாடு முழுவதும் எளிமையாகவும் ஒரே முறையிலும் இருக்க வேண்டும் என மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இந்த திருத்தம் செய்யப்பட்ட சட்டத்தின் அடிப்படியில், மூன்றாம் தலைமுறை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தேவையான வழிமுறைகள் எளிமைக்காப்படும்.
ஆனால், இவர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன.
>இந்த மூன்றாம் தலைமுறை அகதி சுவிஸ் நாட்டில் பிறந்திருக்க வேண்டும்.
>C permit’ (permanent residency) எனப்படும் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றுருக்க வேண்டும்.
>குறைந்தது 5 ஆண்டுகள் சுவிஸ் பள்ளியில் கல்வி கற்றிருக்க வேண்டும்.
>மூன்றாம் தலைமுறை அகதியின் தந்தை அல்லது தாய் என இருவரில் ஒருவராவது ’C permit’ (permanent residency) >வைத்திருக்க வேண்டும்.
>பெற்றோரில் ஒருவர் சுவிஸ் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
>மூன்றாம் தலைமுறை அகதியின் பெற்றோர் குறைந்தது 10 ஆண்டுகள் சுவிஸில் வசித்திருக்க வேண்டும்.
>மூன்றாம் தலைமுறை அகதியின் தாத்தா அல்லது பாட்டி சுவிஸில் பிறந்திருக்க வேண்டும் அல்லது இருவரில் >ஒருவராவது ’C permit’ (permanent residency) வைத்திருக்க வேண்டும்.
மேலே கூறிய இந்த நிபந்தனைகளின் அடிப்படியில் மூன்றாம் தலைமுறையினருக்கு குடியுரிமை அளிக்க மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், 25 வயது வரை உள்ள மூன்றாம் தலைமுறை அகதிக்கு மட்டுமே இது பொருந்தும்.
26 முதல் 35 வரை உள்ள மூன்றாம் தலைமுறை அகதிகள், இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் நாளில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் தான் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த புதிய சட்டம் தொடர்பான பொதுவாக்கெடுப்பு எதிர்வரும் பெப்ரவரி 12ம் திகதி நடைபெறவுள்ளது.
சுவிஸ் நாட்டு சட்டப்படி, மத்திய அரசு எந்த ஒரு சட்டத்தையும் குடிமக்களின் அனுமதி இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.