அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Tuesday, 27 September 2016

18ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்!

itr newsஇணையம் பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் மட்டும் இல்லையென்றால் உலகமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும்பாலானோர் முக்கிய தேடுபொறியாக கூகுளைத் தான் பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் ஒரு தகவல் தேட, அது குறித்து பல தகவல்கள் தரும் கூகுள் இன்று தனது 18-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 

வழக்கமாக பிரபலங்களின் பிறந்த நாள், முக்கிய நிகழ்வுகள் போன்றவைகளை நமக்கு நினைவூட்டும் விதமாக கூகுளில், கூகுள் டூடுல் அமைக்கப்படும். ஆனால் இன்று தனது பிறந்த நாளையே டூடுலாக வைத்துள்ளது கூகுள்.

1998-ஆம் ஆண்டு லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற இருவரால் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்டது.

கூகுள் பிறந்த நாள் எப்போது என்பதில் பலருக்கு குழப்பம் ஏற்படலாம். தற்போதைக்கு செப்டம்பர் 27ஆம் திகதி தான் கூகுள் பிறந்த நாள் என்று கூறப்பட்டாலும், கடந்த 2006-ஆம் ஆண்டிற்கு முன்னதாக செப்டம்பர் 26-ஆம் திகதியே கூகுளின் பிறந்த நாளாக கொண்டாடப்பட்டது.