WEL COME TO ITRVAANOLI

ITR DESCRIPTION COMING SOON

LOVE THE WORLD LISTEN ITR VAANOLI

ITR DESCRIPTION COMING SOON

THANK YOU FOR YOUR SUPPORT

ITR DESCRIPTION COMING SOON

START FROM 15 NOV 2015

ITR DESCRIPTION COMING SOON

அனைத்துலக தமிழ் வானொலி ITR FM SWISS

Sunday, 26 February 2017

ஈழத்தின் போர்க்குரல் எழிச்சி பாடகர் சாந்தன் இன்று காலமானார்!

தாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார்.

சாந்தனின் மறைவு குறித்து முரண்பட்ட கருத்துக்கள் இன்று வெளியாகி இருந்த போதும், யாழ் போதனா வைத்தியசாலை உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது.

சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜே.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினா்.

1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் காணப்பட்டார்.முதன்முதலில் 1972 இல் கொழும்பு, செட்டித்தெரு கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்வையிடச் சென்றபோது அங்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இதன்போது ‘மருதமலை மாமணியே முருகையா’ என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டார். இதுவே இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக அமைந்ததுடன் இது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது.

இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த ‘மருதமலைப் பாடலை’ பாடு என்று இவரது இரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.இதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.

அதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார்.1977 இல் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த இவர், 1981இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.

அந்த இசைக்குழு 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் இசைக்குழு என்ற பெயரில் இசைக்குழுவை ஆரம்பித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.


பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலை கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது.
தொடர்ந்து பல புரட்சிப் பாடல்கள் பாடியதோடு எண்பதுகளின் இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இணைந்து பன்னூறு தமிழீழ எழுச்சிப் பாடல்களைப் பாடியிருந்தார். போராட்ட காலத்தில் தமிழீழத்தின் ஆஸ்தான பாடகராய் மிகுந்த மரியாதைக்குரியவராய் வலம்வந்தவர் சாந்தன்.
எண்பதுகளின் இறுதியில் "இந்த மண் எங்களின் சொந்த மண்" என்ற பாடலில் ஆரம்பித்து "களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள்....", "ஆழக்கடல் எங்கும் சோழ மகராஜன்..", "கரும்புலிகள் என நாங்கள்...", "எதிரிகளின் பாசறையை தேடிப் போகிறோம்" முதலான நூற்றுக்கணக்கான எழுச்சிப் பாடல்களும் "பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்" முதலான பக்திப் பாடல்களும் பாடியிருந்தார்.
போராட்ட எழுச்சியை ஈழத்தின் தமிழ் இளைஞர் யுவதிகளிடையே ஊட்டியதில் சாந்தனின் கணீரென்ற உச்ச ஸ்தாயி குரலுக்கு பெரும் பங்குண்டு.
கடும் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டுவந்த சாந்தன் கடந்த வருடம் சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அன்னாரின் இழப்பு ஈடிணையற்ற இழப்பாகும்.
ITR  ஊடக குழுமம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்

Monday, 5 December 2016

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா காலமானார்?அப்போலோ மறுப்பு

ITR NEWSதமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி தவறு அப்போலோ மறுப்பு

Tuesday, 29 November 2016

கருணா கைது!

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதியமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் பயன்படுத்திய வாகனம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக இன்றையதினம் கருணா அழைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள கருணா அம்மான் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அம்மான் அதிலிருந்து விலகி, மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் அவருக்கு பிரதியமைச்சர், மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் போன்ற முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Wednesday, 9 November 2016

சேலை அணிந்து கோவிலுக்கு வந்த பிரித்தானிய பிரதமர் தெரேசா!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே பெங்களூரில் உள்ள ஸ்ரீ சோமேஷ்வர கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்


ITR NEWS

ITR NEWS

ITR NEWS

ITR NEWS

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி !

itrnewsஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு ஹிலாரி கிளிண்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே நிலவிய கடும்போட்டியில் டொனால்ட் டிரம்ப் அதிக வாக்குகளை பெற்று அமெரிக்க அதிபர் பதவியைக் கைப்பற்றினார். 

அமெரிக்க அதிபராகத் தெரிவாகியுள்ள டிரம்ப்புக்கு குடியரசு கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வாழ்த்துத் தெரிவித்துள்ளமையானது அமெரிக்க அதிபர் தேர்தலின் தோல்வியை ஹிலாரி ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Monday, 7 November 2016

இங்கிலாந்தில் ஏ.டி.எம் காட்டில் பிரபாகரனின் படம்

itr newsஏ.டி.எம் காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.
குறித்த ஏ.டி.எம் காட் இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் என தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வங்கியே தனது ஏ.டி.எம் காட்டில் பிரபாகரன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதா, அல்லது வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த புகைப்படங்களை ஏ.டி.எம் கார்டுகளில் அச்சிடும் வசதியை அளித்து, அதன்மூலம் பிரபாகரன் புகைப்படத்தை புலிகள் ஆதரவாளர்கள் அச்சிட்டுக் கொண்டார்களா என்பது பற்றிய தகவல் வெளிவரவில்லை.

தற்போது, இதுகுறித்த படமும் செய்தியும் சமூகவலைத்தளங்களில்  தீயாய் பரவியுள்ளது.